நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில், அதிமுக வேட்பாளர்களாக, கே.பி.முனுசாமி, தம்பிதுரை மற்றும் தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு, அதிமுக சார்பில் போட்டியிடும் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை அறிவித்துள்ளனர். அதிமுக சார்பில், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, கொள்கை பரப்பு செயலாளர் தம்பிதுரை ஆகியோர் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளனர். மேலும் ஒரு இடத்திற்கு, தமிழ்மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் போட்டியிடுவார் என தெரிவித்துள்ளனர்.
Discussion about this post