சரியாக ஆடவில்லை என்றால் வீரர்கள் மட்டுமின்றி நிர்வாக தலைமையிடத்தில் நமக்கு மரியாதை கிடைக்காது என்று கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார்.
மேற்கு இந்திய தீவு அணியின் அதிரடி பேட்ஸ்மேனான கிறிஸ் கெய்ல், தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் மான்சி சூப்பர் லீக்கில் விளையாடினார். ஜோசி ஸ்டார்ஸ் அணி சார்பாக களமிறங்கிய கெய்ல், 6 போட்டிகளில் விளையாடி 101 ரன்கள் மட்டுமே ஒரு எடுத்திருந்தார். ஒரு வெற்றியை கூட அணிக்கு பெற்று தரவில்லை. நேற்று நடைபெற்ற 6-வது போட்டியிலும் அரை சதம் அடித்த நிலையில், அணி தோல்வியடைந்தது.
இந்தநிலையில், ஜோசி ஸ்டார்ஸ் அணியில் இருந்து விடைபெறுவதாக உணர்ச்சிபூர்வமாக கிறிஸ் கெய்ல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஒன்றிரண்டு போட்டிகளில் சரியாக விளையாடவில்லை என்றால், அணிக்கு சுமையாகி விடுவேன் என்று கூறினார். ஜோசி ஸ்டார்ஸ் அணியைப் பற்றி மட்டுமே நான் குறிப்பிடவில்லை. பொதுவாகவே, சரியாக ஆடவில்லை என்றால் சக வீரர்கள், நிர்வாக தலைமை போன்ற இடங்களில் மரியாதை கிடைக்காது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், நான் பணத்திற்காக விளையாட வரவில்லை என்றும் கடந்த ஆண்டு ஜோசி ஸ்டார்ஸ் அணியில் மிகுந்த மரியாதையும் மகிழ்ச்சியும் நிரம்பியிருந்தது என்று தெரிவித்தார்.
Discussion about this post