நார்வேயில் ஆளும் கட்சியின் மூத்த தலைவரான உள்ள 58 வயதான பெர் சாண்ட்பெர்க் (Per Sandberg), மீன்வளத்துறை அமைச்சராக இருந்தார். மீன் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வரும் பஹாரே லெட்னெஸ் (Bahareh Letnes) என்ற மாடல் அழகியுடன் அவர் சுற்றுலா சென்று இருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, அமைச்சருக்கு எதிராக கண்டனங்களும் வலுத்தன. இந்நிலையில், சாண்ட்பெர்க் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கட்சியின் பொறுப்புகளில் இருந்தும் அவர் விலகி இருப்பதாக பிரதமர் எர்னா சோல்பெர்க் (Erna Solberg ) தெரிவித்துள்ளார்.
Discussion about this post