சீனா சென்றுள்ள வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் அந்நாட்டு அதிபர் ஜின் பிங்கை சந்தித்துப் பேசினார். சீன அதிபர் ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று கிங் ஜோங் உன் தனது மனைவி ரீ சால் ஜூ மற்றும் உயரதிகாரிகளுடன் தனி ரயிலில் பீஜிங் சென்றடைந்தார். அங்கு, ஜின் பிங்கை, கிங் ஜோங் உன் சந்தித்துப் பேசினார்.
அப்போது, அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் மற்றும் கிங் ஜோங் உன் இடையேயான 2வது சந்திப்புக்கு ஆதரவளிப்பதாக ஜின் பிங்கின் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரிய தீபகற்பம் பகுதியில் நிலவும் சூழல் மற்றும் அணு ஆயுதங்கள் குறித்தும் அவர்கள் பேசியதாக கூறப்படுகிறது.
Discussion about this post