ஜப்பான் கடற்பகுதியில் 2 ஏவுகணைகளை வடகொரியா பரிசோதனை செய்ததாகத் தென்கொரியா தகவல் தெரிவித்துள்ளது
வடகொரியா அடிக்கடி அணு ஆயுத சோதனை. ஏவுகணைச் சோதனை நடத்தி உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தநிலையில் அமெரிக்க அரசு, வடகொரியாவிடம் பேச்சு நடத்தியது. இதில் அணு ஆயுதச் சோதனையைக் கைவிடுவது என வடகொரியா அறிவித்தது. இந்நிலையில், வடகொரியா மீண்டும் ஏவுகணைச் சோதனையை நடத்தியுள்ளது.
இதுபற்றித் தென்கொரிய ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில், தெற்கு ஹம்கியோங்கில் உள்ள சொந்தோக் என்ற நகரில் இருந்து ஜப்பானின் கிழக்குக் கடல் பகுதிக்குக் குறுகிய தொலைவு சென்று இலக்கைத் தாக்கி அழிக்கும் இரண்டு ஏவுகணைகளை அனுப்பி பரிசோதனை செய்துள்ளது. இது, கடந்த ஒருமாதத்தில் வடகொரியா மேற்கொள்ளும், 7ஆவது ஏவுகணை பரிசோதனை என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post