அணு ஆயுதங்களை கைவிடும் வரை வடகொரியாவுக்கு எதிர்காலம் கிடையாது என டிரம்ப் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
அணுஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்திய வடகொரியாவுடன் அமெரிக்கா, கடந்த ஆண்டு பேச்சுவார்த்தை நடத்தியது. அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும் சிங்கப்பூரில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்புக்கு பின்னர் அணுஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை செய்வதை வடகொரியா நிறுத்தி வைத்தது. இதனையடுத்து வடகொரியா மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடையை நீக்குவது தொடர்பாக நடத்தப்பட்ட 2வது சந்திப்பு தோல்வியில் முடிந்தது.
இந்தநிலையில், அணுஆயுதங்களை முழுமையாக கைவிடுவது தொடர்பாக வடகொரியா ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொண்டால், நம்பமுடியாத மற்றும் அற்புதமான பொருளாதார வளர்ச்சியை அந்நாடு அடையும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். மாறாக அணுஆயுதங்களை வைத்திருக்குமேயானால், அந்நாட்டுக்கு பொருளாதார ரீதியில் எதிர்காலம் இருக்காது என அவர் எச்சரித்துள்ளார்.
Discussion about this post