தென்தமிழகத்தில் 20-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

வரும் 20-ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்க சாதகமான சூழ்நிலை நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் சில பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இரவில் விட்டுவிட்டு லேசான தூறல் காணப்பட்டது. இதனிடையே, வடகிழக்கு பருவமழை சனிக்கிழமை தொடங்கும் சூழல் நிலவுவதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

ஆந்திராவின் வடக்கு கடலோரம், தெலுங்கானா, கர்நாடகா, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை முடிவுக்கு வந்து, வடகிழக்கு பருவமழை சனிக்கிழமையன்று தொடங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

வெப்பச்சலனம், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கேரளா, அதனை ஒட்டியுள்ள பகுதிகள், தென் தமிழகம் மற்றும் உள் மாவட்டங்களில் மழை அல்லது கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version