பிரபல நிறுவனம் நூடுல்ஸ் டிசைனில் காலணிகளை தயாரித்து சமூகவலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
இன்றைய கால கட்டத்தில் மனிதர்கள் , தங்களின் கால்களில் சக்கரத்தை கட்டிக் கொண்டு அவர்களின் தேவைகளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றனர். அப்படி பயணிக்கும் மனிதர்களின் உணவு முறைகளும் வேகமாக மாறி வருகிறது. அந்த வரிசையில் பேச்சிலர்கள்முதல் வீட்டுப் பெண்கள் வரை இன்ஸ்டண்டாக சமைக்கும் நூடுல்ஸை தயார் செய்து சாப்பிட்டு வருகின்றனர். அந்த நூடுல்ஸ் டிசைனில் காலணிகளை தயாரித்து பிரபல நிறுவனம் புகைப்படம் வெளியிட்டுள்ளது.
இத்தாலியைச் சேர்ந்த லக்ஸுரி பிராண்ட் பொடிகா வெனிடா (bottega veneta) நூடுல்ஸ்-ஆல் ஈர்க்கப்பட்டு அதனை டிசைனாகப் பயன்படுத்தி காலணிகளை தயாரித்து அதன் புகைப்படங்களை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. 2020 – ல் இந்த காலணிகள் விற்பனைக்கு வரும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
Discussion about this post