இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வாக்கு சேகரிக்கிறார்.
நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து இன்று முதலமைச்சர் வாக்கு சேகரிக்கிறார். களக்காடு ஒன்றியத்துக்குட்பட்ட இடங்களில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முதல்வர் பிரசாரம் செய்கிறார். இதைத்தொடர்ந்து வரும் 18ம் தேதி மீண்டும் நாங்குநேரி தொகுதி செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக வேட்பாளர் நாராயணனுக்கு ஆதரவாக அத்தொகுதியில் சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் மேற்கொள்கிறார்.
Discussion about this post