அமெரிக்காவைச் சேர்ந்தப் பெண் கவிஞர் லூயிஸ் க்ளூக்கிற்கு இலக்கியத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
1943ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் பிறந்த லூயிஸ் க்ளூக், 1968 ஆம் ஆண்டில் வெளியான ‘பர்ஸ்ட் பார்ன்’ என்ற கவிதை மூலம் அறிமுகமானார். இவரதுப் படைப்புகளில் முக்கியமானது 2006ஆம் ஆண்டில் வெளிவந்த ‘அவெர்னோ’, 2014ல் வெளிவந்த ‘Faithful and Virtuous Night’. இந்த கவிதை படைப்புகள் மக்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றது.
இதையடுத்து, நியூ ஹெவனில் உள்ள யாலே பல்கலைக்கழகத்தில் ஆங்கிலப் பேராசிரியராக பணியாற்றி வரும் இவர், அமெரிக்க சமகால இலக்கியத்தில் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவராகப் பாராட்டு பெற்றுள்ளார். இதுவரை 12 கவிதைத் தொகுப்புகளையும், கவிதைகள் குறித்த சில கட்டுரைகளையும் வெளியிட்டுள்ள லூயிஸ் க்ளூக்கிற்கு நடப்பாண்டு இலக்கியத் துறைக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது.
வெள்ளிக்கிழமையன்று அமைதிக்கான நோபல் பரிசும், 10-ம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது.