2019 ஆம் ஆண்டின் வேதியியல் பிரிவிற்கான நோபல் பரிசு, அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த குட் இனஃப், ஸ்டான்லி விட்டிங்ஹாம் என்பவர்களுக்கும், ஜப்பானை சேர்ந்த அகிரா யோஷினோவுக்கும் இந்த விருது பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. லித்தியன் அயன் பேட்டரிகளின் மேம்பட்ட வடிவத்தை உருவாக்கியதற்காக இந்த நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்பின் மூலம், வருங்காலத்தில் வாகனங்கள், இன்வெர்ட்டர்கள் மற்றும் ஏனைய மின்சாதன பொருட்களில் பயன்படுத்தப்படும் லித்தியன் அயன் பேட்டரிகளின் ஆயுட்காலத்தை அதிகரிக்க முடியும்.
வேதியியலுக்கான தேர்வுக்குழு இந்த மூவரையும் தேர்வு செய்த பின்னர், இதற்கான அறிவிப்பு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வெளியிடப்பட்டது.
இதே போன்று, 10 ஆம் தேதி இலக்கியத்திற்கும், 11 ஆம் தேதி அமைதிக்கான நோபல் பரிசும், இறுதியாக 14 ஆம் தேதி பொருளாதாரத்திற்கான நோபல் பரிசும் அறிவிக்கப்பட உள்ளது.
Discussion about this post