பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்கியதில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்று கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் சிபிஐ தலையிட்டு விசாரணை நடத்த வேண்டுமென சீராய்வு மனுக்கள் தொடரப்பட்டன. ஆனால் சில ஒப்பந்த ஆவணங்கள் ஊடகங்கள் மூலமாக வெளிவந்ததை அடுத்து மீண்டும் இந்த வழக்கை மறுபரீசிலனை செய்ய உச்ச நீதிமன்றம் சம்மதித்தது. இதையடுத்து இந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில், ரஃபேல் போர் விமான கொள்முதலில் ஊழல் நடைபெறவில்லை என்ற தீர்ப்புக்கு எதிராக தொடர்ந்த சீராய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில் ரபேல் விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற நிலைக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Discussion about this post