எல்லை பிரச்சனை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வாய்ப்பே இல்லை!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் மரபுப்படி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் உரை நிகழ்த்துகிறார். முதற்கட்ட கூட்டத்தொடர் நாளை தொடங்கி பிப்ரவரி 13 வரையிலும், 2ஆம் கட்ட கூட்டத்தொடர் மார்ச் 13ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 வரையிலும் இரு கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தொடரை அமைதியாக நடத்துவது குறித்து, அனைத்து கட்சி கூட்டத்தை மத்திய அரசு டெல்லியில் நடத்தியது. இந்தகூட்டத்தில் அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை பங்கேற்றார். இந்த கூட்டத்தில் காஷ்மீர் மற்றும் அருணாச்சல பிரதேச எல்லையில் சீன அத்து மீறல்கள் குறித்து வரும் நடாளுமன்ற தொடரில் விவாதிக்க வேண்டும் என்று சில கட்சிகள் கோரிக்கை வைத்தன. ஆனால் இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான விவகாரம் என்பதால் அதுபற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்தது. எனினும் பிற முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க அரசு தயாராக இருப்பதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார்.

Exit mobile version