ரபேல் ஊழல் விவகாரத்தில் சிபிஐ விசாரணையில் இருந்து பிரதமர் மோடியை யாரும் பாதுகாக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து விசாரணையை துவங்கியதால் சிபிஐ தலைவர் பதவியில் இருந்து மத்திய அரசு அலோக் வர்மாவை நீக்கியதாக குற்றம் சாட்டினார்.இந்நிலையில், உச்சநீதிமன்றம் மீண்டும் அவரை சிபிஐ தலைவராக நியமித்துள்ளது நிம்மதி அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ரபேல் விவகாரத்தில் இருந்து பிரதமர் மோடியை யாரும் பாதுகாக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் பணத்தில் இருந்து 30 ஆயிரம் கோடியை எடுத்து தனது நண்பர் அனில் அம்பானிக்கு மோடி கொடுத்ததை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள போகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும் டசால்ட் நிறுவனத்திற்கு 20 ஆயிரம் கோடியை அளித்துள்ள மத்திய அரசு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய 15 ஆயிரத்து 700 கோடியை அளிக்க மறுப்பதாகவும், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கும் நிலைக்கு அந்நிறுவனத்தை தள்ளிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
Discussion about this post