5 மற்றும் 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை கண்டு மாணவர்களும், பெற்றோர்களும் அச்சப்பட தேவையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அடுத்த 3 ஆண்டுகளுக்கு 5 மற்றும் 8ஆம் வகுப்பிற்கான பொதுத்தேர்வில் மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக” குறிப்பிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் கற்றல் திறனை ஒரே மாதரியாக சோதித்து அறியவும், ஆசிரியர்களுக்கு கூடுதல் பயிற்சியை அளிக்கவும் இந்த பொதுத்தேர்வுகள் நடத்தப்படுவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் பொதுத்தேர்வுகளை கண்டு மாணவர்களும், பெற்றோர்களும் அச்சப்பட தேவையில்லை என்று அறிக்கையில் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post