வக்கீல்களைப் போன்று சட்ட சிக்கல்களுக்குத் தீர்வு சொல்லும் IBM-WATSON என்னும் மென்பொருள் ஒன்றை கடந்த ஆண்டு ஐபிஎம் நிறுவனம் வெளியிட்ட நிலையில், சட்ட நிறுவனங்களில் பெருமளவில் வேலைஇழப்புக்கு வாய்ப்பு இருக்கும் என அமெரிக்க பார் கவுன்சிலின் விவாதத்தில் தெரிய வந்துள்ளது.
இனிமேல் சட்ட சிக்கல்களுக்கு ஒரு வக்கீலைத் தேடி அலைந்து பணம் கட்டி சட்ட வழிமுறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை.மாறாக சட்டநிபுணத்துவமுள்ள ஒரு மென்பொருள் நம் சிக்கலுக்கான சட்டரீதியான தீர்வை முந்தியா வழக்குகளுடனும்,சட்டப்புத்தகத்துடனும் ஒப்பிட்டுப் பார்த்து நொடிப்பொழுதில் வழங்குகிறது.
எவ்வளவு பாண்டித்தியம் இருந்தாலும் மனிதர்கள் நோக்குமயக்கப் பிழைகளால் சிலவற்றைத் தவர விடுவதுண்டு. அதைகூட விடாமல் தீர்வு சொல்லவும், சட்டநிறுவனங்களின் துரோகபோக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கவுமே இதை முன்னெடுத்ததாக சொல்கிறார் இதன் வடிவைமைப்பாளரும் இசுரேலின் ஒரு சட்டநிறுவன ஊழியருமான நூரி பெக்கர். (Noory Bechor, CEO of LawGeex.)
Discussion about this post