பத்து மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்கள், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவர் என அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.கொரோனா ஊரடங்கால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வும், 11-ம் வகுப்பில் விடுபட்ட தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டதுடன், மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களில், 80 சதவீத மதிப்பெண்களும், வருகை பதிவேட்டை அடிப்படையாக கொண்டு 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் மாணவர்கள் எவ்வளவு மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும் தேர்ச்சி பெற்றதாக கருதப்படுவர் என அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தெரிவித்துள்ளார். இந்த தகவலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்குமாறும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
Discussion about this post