மே 1ம் தேதி ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என தமிழக அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே தினம் என்பதால் மே 1 விடுமுறையில் ஊரடங்கு அவசியமில்லை.
அதுபோக 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தடுப்பூசி முகாம் துவங்க உள்ளதால் அவர்களை தடுக்க முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மே 1 ம் தேதி ஊரடங்கு அறிவிப்பதா? வேண்டாமா என அரசே முடிவு செய்து கொள்ளலாம் என உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் ஊடகங்களுக்கு அனுமதிப்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவு பிறப்பித்து, வழக்கு விசாரணையை நாளை தள்ளிவைத்தது.
Discussion about this post