சிகிச்சையின்போது எந்த மருத்துவரும், செவிலியரும் கொரோனா வார்டுக்கு வரவில்லை. இதே நிலை நீடித்தால் அஜாக்கிரதையால் பலியாவதே அதிகமாகும் என மணப்பாறையை சேர்ந்த ராஜேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா நோயாளிகளுக்கு முறையான சிகிச்சை வழங்குவதை உறுதி செய்ய அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களை கண்காணிக்க உத்தரவிடக் கோரி மணப்பாறை ரமேஷ் வழக்கு தொடர்ந்தார்.
தன் சிகிச்சையின்போது எந்த மருத்துவரும், செவிலியரும் கொரோனா வார்டுக்கு வரவில்லை. இதே நிலை நீடித்தால் அஜாக்கிரதையால் பலியாவதே அதிகமாகும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளதால், சிகிச்சையில்லாமல் உயிரிழந்தார் என எந்த புகாரும் இல்லை என்று கூறி வழக்கு முடித்துவைக்கப்பட்டுள்ளது
Discussion about this post