இந்தியாவில் யாருக்கும் ‘கொரோனா வைரஸ்’ காய்ச்சல் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், இந்தியாவில் அதற்கான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட 7 விமான நிலையங்களில், பயணிகளிடம், கொரோனா வைரஸ் குறித்த பரிசோதனைகள் நடத்தப்பட்டன. 43 விமானங்களில், 9 ஆயிரத்து 156 பயணிகளிடம் இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், யாருக்கும் வைரஸ் காய்ச்சல் தாக்கவில்லை என்பது நிரூபணமாகியுள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பிரீத்தி சுடான் தெரிவித்துள்ளார்.
Discussion about this post