மத்திய அரசுடன் மோதல் போக்கை கைவிட்டு, திட்டங்களுக்கு ரிசர்வ் வங்கி உதவ வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி வலியுறுத்தியுள்ளார்.
மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியிடையே சமீப காலமாக மோதல் போக்கு நிலவுகிறது. தன்னிடம் உள்ள நிதியை குறைத்துக் கொண்டு மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கு கூடுதல் நிதியுதவி வழங்க வேண்டும் என்று மத்திய அரசு கூறி வருகிறது.
இதையடுத்து சமீபத்தில் நடைபெற்ற ரிசர்வ் வங்கியின் இயக்குநர்கள் கூட்டத்தில், இதுகுறித்து பரிசீலிக்க குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசுடன் மோதல் போக்கை கைவிட வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கேட்டுக் கொண்டுள்ளார். டெல்லியில் பேட்டி அளித்த அவர், தன்னிடம் எவ்வளவு நிதியை வைத்துக் கொள்ளலாம் என்பது குறித்து ரிசர்வ் வங்கி நிர்ணயிக்க வேண்டிய தருணம் இது என்று கூறியுள்ளார்.
தன்னிடம் வைத்துள்ள நிதியின் ஒருபகுதியை மத்திய அரசுக்கு ஒதுக்கி, நாட்டின் வறுமையை ஒழிக்க ரிசர்வ் வங்கி உதவ வேண்டும் என்றும் அருண் ஜெட்லி வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post