ராஜஸ்தான் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடஙகும் நிலையில், அம்மாநில அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை பாஜக கொண்டுவருகிறது.
கடந்த ஒரு மாத காலமாக ராஜஸ்தான் மாநில அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சரான அஷோக் கெலாட் மற்றும் துணை முதலமைச்சரான சச்சின் பைலட் ஆகிய இருவரும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கட்சியில் பிளவு ஏற்பட்டது. இதற்கிடையே காங்கிரஸ் எம்.பி.ராகுல்காந்தி சச்சின் பைலட்டிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். நாளை ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவை தொடங்க உள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. இது குறித்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் அசோக் கெலாட், மாநிலம் மற்றும் மக்களின் ஜனநாயகத்திற்காக கட்சிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை மறந்து மன்னிக்க வேண்டிய தேவை உள்ளதாக கூறியுள்ளார். இந்நிலையில், தகுதி நீக்கம் செய்யப்பட்ட இரண்டு காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மீதான நடவடிக்கையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே நாளை காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர உள்ளதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post