மாணவிகளை தவறாக பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியர் நிர்மலா தேவியின் வழக்கறிஞர்,வாதாடுவதற்கு அவகாசம் கேட்டதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி மாணவிகளிடம் தவறாக பேசிய வழக்கில் பேராசிரியர் நிர்மலாதேவி,உதவி பேராசிரியர் முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டும் என மூன்று பேரும் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். ஆனால் மூன்று பேர் மீதான வழக்கில் முகாந்திரம் இருப்பதாக அரசு தரப்பு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இரு மனுக்களும் இன்று விசாரனைக்கு வந்தது.
அப்போது நிர்மலா தேவி உள்ளிட்ட 3 பேரின் வழக்கறிஞர்களும் தங்களுக்கு வாதாடுவதற்கு அவகாசம் வேண்டும் எனக்கேட்டனர். இதையடுத்து விசாரணையை வரும் 20 ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அன்று 3 பேரையும் மீண்டும் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
Discussion about this post