புதிதாக தொடங்கப்பட்டுள்ள உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் வரியை குறைக்க திட்டமிட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் கோவாவில் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் முன்னர், நிதித்துறை அமைச்சர் நிர்மாலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், புதிதாக தொடங்கப்பட்டுள்ள உள்நாட்டு உற்பத்தி நிறுவனங்களின் வரியை குறைக்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
2019 அக்டோபருக்கு பிறகு தொடங்கப்படும் உற்பத்தி நிறுவனங்களுக்கு 15 சதவீதம் வரி மட்டுமே குறைக்கப்படும் எனவும், உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 22 சதவீதம் வரி விலக்கு அளிக்க உள்ளதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வரி விலக்கு பெறும் நிறுவனங்களின் மேட் வரி 18 புள்ளி 5 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக குறைக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Discussion about this post