நிர்பயா கொலைக் குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை, விசாரணை நீதிமன்றத்திடம் பெற்றுக் கொள்ளலாம் என திகார் சிறை நிர்வாகத்துக்கு, உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
டெல்லி மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், நான்கு பேரையும் தனித்தனியாக தூக்கிலிட அனுமதிக்க முடியாது என்ற டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக, மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வாதங்களை கேட்ட நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு, 4 பேரையும் தூக்கிலிடுவதற்கான புதிய தேதியை, விசாரணை நீதிமன்றத்தை அணுகி பெற்றுக் கொள்ளலாம் என திகார் சிறை நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தனர். குற்றவாளிகள் சட்ட வழிமுறைகளை அணுகுவதற்கான கெடு இன்றுடன் முடிவடைந்ததாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, விசாரணையை வரும் 13ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Discussion about this post