நிர்பயா வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான அக்சய் குமாரின் மறுசீராய்வு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி மருத்துவ மாணவி நிர்பயா, 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முகேஷ் குமார், பவன் குமார் குப்தா, வினய் குமார், அக்சய் குமார் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பிப்ரவரி 1ம் தேதி தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் தூக்கு தண்டனைக்கு எதிராக குற்றவாளி அக்சய் குமார் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறுசீராய்வு மனு, 5 நீதிபதிகள் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வருகிறது. தண்டனைக்கு எதிராக நிர்பயா குற்றவாளிகள் கருணை மனு மற்றும் மறுசீராய்வு மனுக்களை அடுத்தடுத்து தாக்கல் செய்துள்ளதால், திட்டமிட்டபடி பிப்ரவரி 1ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. மற்றொரு குற்றவாளியான வினய் குமார், குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post