வைர வியாபாரி நீரவ் மோடியின் சொத்துக்கள் 225 கோடி ரூபாயை அமுலாக்கத் துறையினர் முடக்கி உள்ளனர்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு வைர வியாபாரி நீரவ் மோடி வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றார். அவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இந்த நிலையில், சட்ட விரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ், நீரவ் மோடிக்கு சொந்தமாக ஹாங்காங்கில் உள்ள 255 கோடி ரூபாய் மதிப்பு சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர். இதுவரை 4 ஆயிரத்து 744 கோடி ரூபாய் மதிப்புள்ள அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post