தொழிலதிபர் நிரவ் மோடியின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் தொழிலதிபர் நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் உள்ள அவரது சொத்துகளும் முடக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் லண்டனில் நிரவ் மோடி இருப்பதாக தகவல் வெளியானது. இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். ஆனால், நிரவ் மோடி தனக்கு ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்தார்.
இந்த மனு விசாரணையின் போது நிரவ் மோடி, வெளிநாடு தப்பிச்செல்ல வாய்ப்பு உள்ளதாகவும், நீதிமன்றத்தில் தாமாக முன்வந்து ஆஜராகாத நிரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க முடியாது என தெரிவித்தது. மேலும், நிரவ் மோடி நீதிமன்ற உத்தரவின்படி 29ம் தேதி வரை லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இரண்டாவது முறையாக மீண்டும் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்தார் நிரவ் மோடியின் மனு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் நிரவ் மோடியின் ஜாமின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தனர். மேலும், இந்த வழக்கு தொடர்பான அடுத்த விசாரணை ஏப்ரல் 26-ல் நடைபெறும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
Discussion about this post