கேரளாவில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவி இருப்பதை அடுத்து, கர்நாடகாவிலும் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
கேரள மாநிலத்தில் பரவியுள்ள நிபா வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இந்த காய்ச்சல் அண்டை மாநிலமாக கர்நாடகாவிலும் பரவலாம் என்று கருதப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. சாம்ராஜ்நகர், மைசூர், குடகு, உடுப்பி, ஷிமோகா உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றன.
Discussion about this post