கேரளாவில் தற்கொலைத் தாக்குதல் நடத்த சதி செய்த ரியாஸ் அபுபக்கர் என்பவரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.
கேரள மாநிலம் காசர்கோட்டைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் மற்றும் அகமது அராஃபத் ஆகியோரிடம் பயங்கரவாத தொடர்பு குறித்து என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் இலங்கையில் தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு இந்தியாவில் இருந்து யாரேனும் உதவினார்களா? என்ற கோணத்தில் என்ஐஏ அமைப்பினர் விசாரணை நடத்தினர்.
இதில் கேரளத்தில் சிலருக்கு பயங்கரவாதி ஜஹரான் ஹாஷிமியுடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, பாலகாட்டைச் சேர்ந்த ரியாஸ் அபுபக்கரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் நடைபெற்ற விசாரணையில், கேரளத்தில் தற்கொலைத் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்ததை ஒப்புக்கொண்டார். ரியாஸ் கொச்சி நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் அபு பக்கர் அல்-பாக்தாதி பேசும் வீடியோ ஒன்று ஆண்டுகால இடைவேளைக்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ளது. முன்னதாக, அவர் கொல்லப்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், அவரது பிரசார வீடியோவை ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு வெளியிட்டுள்ளது. எனினும், இந்த வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.
Discussion about this post