எல்லை பிரச்னை தொடர்பாக இந்திய மற்றும் சீன ராணுவ அதிகாரிகள் இன்னும் சில நாட்களில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கிழக்கு லடாக் பகுதியில் இந்தியா – சீனா இடையேயான எல்லைப் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண இருநாடுகளும் முடிவு செய்துள்ளன. அந்த வகையில் கடந்த 6ம் தேதி, இருதரப்பு ராணுவ உயர் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது. அதன் எதிரொலியாக எல்லையில் நிலவி வந்த பதற்றம் தணிந்தது. மேலும், இருதரப்பு சார்பில் தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அடுத்த கட்ட முயற்சியாக இந்தியா – சீன ராணுவ அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் விரைவில் நடத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. லடாக் அடுத்த சுஷூல் பகுதியில் உள்ள ராணுவ அதிகாரிகள் குழு, ஆலோசனை கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Discussion about this post