தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை: வானிலை மையம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவ வாய்ப்புள்ளதால், வடகிழக்கு பருவமழை நிறைவடையும் சூழல் உருவாகியுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை தாமதமாகவே தொடங்கியது. கடந்த அக்டோபர் 1 முதல் டிசம்பர் 30-ம் தேதி வரையிலான வட கிழக்கு பருவ மழை சராசரியாக 441 மில்லி மீட்டர் பெய்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை 337 மில்லி மீட்டர் மழைதான் பெய்துள்ளது.

சென்னையில் 788 மில்லி மீட்டர் மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 352 மில்லி மீட்டர் மட்டுமே பெய்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version