மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே அதிகாரிகளின் அலட்சியத்தால், நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நூற்றுக்கணக்கான நெல் மூட்டைகள், மழையால் சேதமடைந்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கோவிலாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட கே.வடுகபட்டி கிராமத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைத்து, நெல் மூட்டைகளை கொள்முதல் செய்து வந்த நிலையில், கடந்த 15 நாட்களுக்கு முன்பு கொள்முதல் பணி திடீரென நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், கொள்முதல் நிலைய களத்திலேயே விவசாயிகள் நெல்லை கொட்டி குவியல் குவியலாக வைத்துள்ளனர்.
இந்தச் சூழலில் வியாழக்கிழமை பெய்த கனமழையால் கொள்முதல் நிலையம் முழுவதும் நீர் தேங்கியதோடு, கொட்டி வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான மூட்டை நெல்லும் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
அரசு விரைவில் மீண்டும் நெல் கொள்முதல் நிலையத்தை நடைமுறைக்கு கொண்டு வந்து நெல்லை எடை போட்டு எடுத்து செல்ல வேண்டும் என்றும் தவறும் பட்சத்தில் விவசாயிகள் தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
விவசாயிகளின் கோரிக்கை பேட்டியை காண
↕↕↕↕↕
Discussion about this post