மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், புதுமணத் தம்பதிகள், கர்ப்பிணிப் பெண் உள்ளிட்டோரும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். கர்நாடகாவின் மங்களூருவைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவர் வளைகாப்பு நிகழ்ச்சி முடிந்த கையோடு வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்து தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்.
காஷ்மீரின் உதம்பூரைச் சேர்ந்த புதுமண தம்பதி திருமணக் கோலத்தில் வாக்களித்தனர். காஷ்மீரின் கத்வாலா, மேற்கு வங்கத்தின் இஸ்லாம்பூரில் முதியோர்கள் தள்ளாத வயதிலும் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
Discussion about this post