இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி, தொடரை முழுமையாக கைப்பற்றியது.
கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி 242 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பின்னர், முதல் இன்னிங்சில் விளையாடிய நியூசிலாந்து அணி 235 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து, 2வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 90 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 3ம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இந்திய அணி, நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், 124 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனைத் தொடர்ந்து 132 ரன்கள் என்ற எளிய வெற்றி இலக்குடன் நியூசிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் லாதம், டாம் பிளன்டெல் ஆகியோர் சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்து ஆட்டமிழந்தனர். கேப்டன் வில்லியம்சன் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். 36 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை எட்டிய நியூசிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம், இரண்டு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி கைப்பற்றி உள்ளது.
Discussion about this post