உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பர்மிங்க்ஹாமில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணியில் குயின் டி காக் 5 ரன்களில் ஆட்டம் இழந்தார், அடுத்து வந்த கேப்டன் டு பிளிஸ்சிஸ் 23 ரன்களும், ஹசிம் ஆம்லா 4 பவுண்டரிகளுடன் 55 ரன்களும், மார்க்ரம் 38 ரன்களும், டேவிட் மில்லர் 36 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். 49 ஓவர்களில் தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்பிற்க்கு 241 ரன்கள் எடுத்தது.
242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணியில் கோலின் மன்ரோ 9 ரன்களில் ஆட்டம் இழந்தார். மார்டின் கப்டில் 35 ரன்னில் ஹிட் விக்கெட் முறையில் விக்கெட்டை பறிகொடுத்தார். ஜேம்ஸ் நீசம் 36 ரன்களும், வில்லியம்சன் 106 ரன்கள் எடுத்து நியூசிலாந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். நியூசிலாந்து 48.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்க்கு 245 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
நான்கு போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ள தென் ஆப்பிரிக்க அணி, அரையிறுதிக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Discussion about this post