கடைசி 2 போட்டிகளிலாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, நியூசிலாந்து அணியில் புதிதாக இரண்டு வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
நேற்று மவுண்ட் மங்கானுவில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், இந்திய அணி அசத்தல் வெற்றியை பெற்று, நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது. ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில், இன்னும் இரண்டு போட்டிகள் மீதமுள்ள நிலையில், கடைசி 2 போட்டிகளிலாவது வெற்றிப் பெற நியூசிலாந்து அணி பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. இதற்காக, காயம் காரணமாக அணியில் இடம்பெறாமல் இருந்த அதிரடி ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம், மோசமாக பந்துவீசி வரும் டக்கி பிரேஸ்வெலுக்குப் பதிலாக சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல், லெக் ஸ்பின்னர் டாட் ஆஸ்ட்ல், சுழற்பந்துவீச்சாளர் ஈஷ் சோதிக்கு பதிலாக களமிறங்குகிறார். 4வது ஒருநாள் போட்டி ஹாமில்டனில், வரும் 31ம் தேதியும், கடைசி போட்டி பிப்ரவரி 3ம் தேதி வெலிங்டனிலும் நடைபெற உள்ளன. நியூசிலாந்து அணியின் புதிய முயற்சி அந்த அணிக்கு ஆறுதல் வெற்றியையாவது கொடுக்கிறதா என்பதை வரும் போட்டிகளில் பார்க்கலாம்.
Discussion about this post