மக்களவை தேர்தலில் முதல்முறை வாக்காளர்கள் எத்தனை பேர் தெரியுமா?

வரும் நாடாளுமன்ற தேர்தலின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 90 கோடி ஆகும்.அதில் புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 8 கோடியே 40 லட்சம் பேர். அதில் 18-19 வயதிலான முதல்முறை வாக்காளர்கள் 1 கோடியே 50 லட்சம் பேர் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது..இந்தியா முழுவதும் உள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 89 கோடியே 78 லட்சம் பேர்.2014 ஆம் ஆண்டு மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 81 கோடியே 57 லட்சமாக இருந்த நிலையில், தற்போது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 7 கோடியாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

2014 ஆம் ஆண்டு 18-19 வயதிலான வாக்காளர்களின் எண்ணிக்கை 2 கோடியே 50 லட்சம் பேர். தற்போது 2019 ஆம் ஆண்டு 1 கோடியே 50 லட்சமாக குறைந்துள்ளது.

இந்தியா முழுவதும் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 46 கோடியே 47 லட்சம் பேர்,பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 43 கோடியே 13 லட்சம் பேர்,மூன்றாம் பாலினத்தவரின் எண்ணிக்கை 39,683 பேர்.

அதிக வாக்காளர்கள் உள்ள மாநிலங்களின் பட்டியலில் உத்திரபிரதேசம் 14 கோடியே 43 லட்சம் வாக்காளர்களை கொண்டு முதல் இடத்திலும்,மகாராஷ்டிரா 8 கோடியே 70 லட்சம் வாக்காளர்களை கொண்டு 2வது இடத்திலும்,7 கோடியே 7 லட்சம் வாக்காளர்களை கொண்டு பிகார் 3வது இடத்திலும், 6 கோடியே 98 லட்சம் வாக்காளர்களை கொண்டு மேற்கு வங்கம் 4வது இடத்திலும், 5 கோடியே 89 லட்சம் வாக்காளர்களை கொண்டு தமிழகம் 5 வது இடத்தில் உள்ளது என இந்திய தேர்தல் ஆணையத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version