Sinovacs நிறுவனம் கண்டறிந்துள்ள தடுப்பூசி, கொரோனா வைரஸில் இருந்து பாதுகாக்கும் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது என தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 78 லட்சத்தை கடந்துள்ள நிலையில், கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் சீனாவை சேர்ந்த Sinovacs என்ற மருந்து நிறுவனம், கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு மருந்தை கண்டறிந்துள்ளது. ”கொரோனா வேக்” என பெயரிடப்பட்டுள்ள அந்த தடுப்பூசி, இரண்டு முறை பரிசோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மருந்தை உடலில் செலுத்தியவுடன், கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதும் தெரிய வந்துள்ளது. இந்த மருந்தால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படுவதில்லை என்றும், இம்மருந்தின் 3வது கட்ட பரிசோதனை பிரேசிலில் நடத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Discussion about this post