சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் புதிய வகை உணவுகளை வழங்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
மாநகராட்சி முழுவதும் மொத்தம் 407 அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. 2013 ஆம் ஆண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட இந்த உணவகங்களில், 5 வருடங்களாக ஒரே மாதிரியான உணவு வகைகளே விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வாடிக்கையாளர்களைக் கவர புதிய வகை உணவுகளை வழங்குவதற்கு சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்காக பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Discussion about this post