நெல்லை மாவட்டம் செங்கோட்டை வட்டாரத்தில் புதிய கல்வி ஆண்டிற்கான இலவச பாட புத்தகங்கள் வந்துள்ளன. இவற்றை பிரித்து பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகமெங்கும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வரும் 3ம் தேதி திறக்கப்பட உள்ளன. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு பாடபுத்தகங்கள், நோட்டு, சீருடைகள் வழங்கப்பட உள்ள நிலையில், இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நெல்லை மாவட்டம் செங்கோட்டை வட்டாரத்தில் புதிய கல்வி ஆண்டிற்கான பாடப் புத்தகங்கள் வந்துள்ளன. இவற்றை பிரித்து பள்ளிகளுக்கு அனுப்பும் பணி தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புத்தகங்கள் அனைத்தும் நெல்லை மாவட்டத்தில் உள்ள வட்டார கல்வி அலுவலகத்திற்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து அப்பகுதியில் உள்ள 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள 39 அரசு பள்ளிகளில் பயிலும் சுமார் 4 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு பள்ளி திறக்கும் முதல் நாளில் வழங்கப்பட உள்ளன.