மத்திய கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகவுள்ள நிலையில், கடலோரப் பகுதியில் இந்திய கடலோரக் காவல்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, இந்திய கடலோரக் காவல்படை, தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கடலில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு, மீனவர்கள் கடலுக்கு திரும்பவேண்டும் என எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்
Discussion about this post