வேதாரண்யத்தில் எஸ்.எம்.எஸ் மற்றும் மிஸ்டு கால் மூலம் பொதுமக்கள் வீட்டிலேயே இருந்தவாறு சேவைகளை பெறும் வகையில் புதிய சேவையை கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் திறந்து வைத்தார். நாகை மாவட்டம் வேதாரணியத்தில் 144 தடை உத்தரவு காலத்தின் போது, பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் அளித்துள்ள 56161 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ் மூலமாகவும், 9999719565 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுத்தால் வீட்டிற்கே வந்து சேவை வழங்கப்படும். இந்த புதிய சேவை மையத்தினை அமைச்சர் ஓ.எஸ். மணியன் தொடங்கி வைத்தார். ஆட்சியர் பிரவின் பி.நாயர்
உடனிருந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஓ.எஸ். மணியன், பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை முறையாக பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே இந்த புதிய சேவை தொடங்கப்பட்டுள்ளதாகவும், தன்னார்வலர்கள் மூலம் பொதுமக்களின் தேவைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று கூறினார்.
Discussion about this post