தேனி மாவட்டம், கொட்டக்குடி காப்புக்காடு பகுதியில் கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி ஏற்பட்ட காட்டுத்தீயில் மலையேற்றப் பயிற்சியில் ஈடுபட்டவர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இது தொடர்பாக, தமிழக முதலமைச்சர் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டார்.இதனடிப்படையில் விபத்துகளை தடுக்கவும் பாதுகாப்பான முறையில் சென்று வரவும் புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மலையேற்றம் மேற்கொள்ள விரும்பும் குழுவினர் அல்லது நபர்கள் அந்தந்த மாவட்ட வன அலுவலர் அல்லது வன உயிரினக் காப்பாளர் அல்லது துணை இயக்குநரின் முன்அனுமதியை பெற வேண்டும். மலையேற்றம் மேற்கொள்வதற்கான பாதைகள், எளிய, மிதமான , மற்றும் கடினமான பாதை என மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
பாதைக்கு ஏற்றவாறு 200 முதல் 5ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வழிகாட்டி உடன் வன ஊழியர் ஒருவரையும் அழைத்துச் செல்ல வேண்டும். வனத்துறையில் பதிவு செய்து கொள்ளாத எந்த ஒரு அமைப்பும் மலையேற்ற பயிற்சிக்கான ஏற்பாடுகளை இனி செய்ய இயலாது போன்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
Discussion about this post