சென்னை மக்களின் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க சென்னை குடிநீர் வாரியம் சார்பில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் நிலவும் குடிநீர் பற்றாக்குறையை தீர்க்க தமிழக அரசும், சென்னை குடிநீர் வாரியமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், Dial for water 2.0 என்ற திட்டத்தை சென்னை குடிநீர் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தால், 48 மணி நேரத்திற்குள் தண்ணீர் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையில், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் 9 ஆயிரம் லிட்டர், 12 ஆயிரம் லிட்டர் அல்லது 16 ஆயிரம் லிட்டர் என்ற அளவில் தண்ணீரை முன்பதிவு செய்யலாம்.
தனி வீடுகளில் வசிப்பவர்கள் அதிகபட்சமாக 9 ஆயிரம் லிட்டர் வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். ஒரு முறை தண்ணீரை பெற்றால், மீண்டும் 7 நாட்களுக்கு பிறகே முன்பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 3 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு 400 ரூபாய் கட்டணமாகவும், 6 ஆயிரம் லிட்டர் தண்ணீருக்கு 475 ரூபாய் கட்டணமாகவும், 9 ஆயிரம் லிட்டருக்கு 700 ரூபாய் கட்டணமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும் திங்கட்கிழமை முதல் இத்திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
Discussion about this post