தேனி மாவட்டம் கம்பம் அருகே கட்டப்பட்ட புதிய புறக்காவல் நிலையத்தை மாவட்ட காவல் கன்காணிப்பாளர் திறந்து வைத்தார்.
கம்பம் அருகேயுள்ள கருநாக்கமுத்தன் பட்டியில் புதியதாக கட்டப்பட்ட புறக்காவல் நிலையத்தை தேனி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில், உத்தமபாளையம் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் கூடலூர் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள்,அரசியல் பிரமுகர்கள்,பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து விழாவில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர், குற்ற செயல்களை உடனே காவல் நிலையத்திற்கு, எவ்வாறு விரைவாக தகவல் தெரிவிக்க வேண்டும் என்பன குறித்து பொதுமக்களுக்கு விளக்கினர்.
Discussion about this post