கொரோனா சிகிச்சைக்கான புதிய வழிகாட்டுதல்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஆக்சிஜன் அளவு 90-க்கு கீழ் இருந்தால் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் மற்றும் தொற்றுக்கான அறிகுறிகள் உள்ளவர்களின் ஆக்சிஜன் அளவு 94ஆக இருந்தால் மருத்துவமனைக்கு வரக்கூடாது என்றும், வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும்
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் ஆக்சிஜன் அளவு 90 முதல் 94-க்குள் இருந்தால் மட்டும் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு செல்ல வேண்டும் எனவும்,
ஆக்சிஜன் அளவு 90-க்கு கீழ் இருந்தால் மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் மருத்துவமனைகளில் சாதாரண படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
Discussion about this post