டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேம்படுத்த புதிய குழு ஒன்றை ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது.
நாட்டில் தற்போது உள்ள டிஜிட்டல் பணவரித்தனையை மேம்படுத்த, நந்தன் நிலேகனி தலைமையிலான 5 நபர்கள் அடங்கிய குழுவை ரிசர்வ் வங்கி அமைத்துள்ளது. இந்த குழுவில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் எச்.ஆர்.கான், விஜயா வங்கியின் முன்னாள் மேலாண் இயக்குனர் கிஷோர் சன்சி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவின் முதல் கூட்டம் நடைபெற்ற பின், 90 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் நிறுவனர்களில் ஒருவரான நந்தன் நிலேகனி, இதற்குமுன் ஆதார் திட்டத்திற்கான தனிநபர் அடையாள ஆணையத்தின் தலைவராக பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post