திருப்பதி ஏழுமலையான கோவிலில் மூன்று இடங்களில் தங்க தகடுகள் பதிக்கும் பணிகள் தொடங்கியுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற அறங்காவலர் குழு கூட்டத்தில், கோயிலில் உள்ள ராஜகோபுரம் நுழைவாயில், கொடிமரம், பலிபீடம் ஆகியவற்றுக்கு, புதிய தங்க தகடுகள் பதிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக, அறங்காவலர் குழு சார்பில் 3 கோடியே 13 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தங்கத் தகடுகள் தயார் செய்யப்பட்ட பின்னர், இரண்டு மாதங்களில் தகடுகள் பதிக்கும் பணிகள் நிறைவு செய்யப்படும் என, அறங்காவலர் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post