புதிய கல்விக் கொள்கை தொடர்பாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மாநில ஆளுநர்களுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார்.
இந்தியாவில் கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் வகையில், புதிய தேசிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டு உள்ளது. பள்ளிகளில் 5-ம் வகுப்பு வரை தாய் மொழியில் கல்வி கற்கவும், மும்மொழி கொள்கையை அமல்படுத்தவும், படிக்கும் போதே மாணவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையிலும் புதிய கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த கல்விக்கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில், புதிய கல்வி கொள்கை தொடர்பாக நாளை மாநிலங்களின் ஆளுநர்களுடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆலோசனை நடத்த உள்ளார். கூட்டத்தில் காணொலி காட்சி மூலம் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்கிறார்.
Discussion about this post